பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்


பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்

அரியலூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளையராஜா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கீழநத்தம் கிராமத்தில் பா.ஜ.க. கிளைத்தலைவர் கலியபெருமாளை தற்கொலைக்கு தூண்டிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அரியலூர் மாவட்ட மகளிர் அணி தலைவி அனிதா மற்றும் அவரது கணவர் ஆனந்தமணிகண்டன் ஆகியோரை கடுமையாக தாக்கி அனிதாவின் ஆடைகளை பிடித்து இழுத்து அதை வீடியோ எடுத்து அவரை தாக்கிய குண்டர்களை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், போலீசார் மெத்தன போக்குடன் நடந்து கொள்வதாகவும் கண்டனம் தெரிவித்தனர்.


Next Story