குத்தாலம் பஸ் நிலையத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குத்தாலம் பஸ் நிலையத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
குத்தாலம்:
குத்தாலம் பஸ் நிலையத்தில், மயிலாடுதுறை மத்திய ஒன்றியம், குத்தாலம் பேரூர் பா.ஜ.க. சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். நகர தலைவர் ரமேஷ், ஒன்றிய பொது செயலாளர் கணேஷ், மாவட்ட துணைத்தலைவர் ஜெயவர்த்தன், பிரசார பிரிவு மாவட்ட துணைத்தலைவர் மகேந்திரன், மூத்த நிர்வாகி பால எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய ஒன்றிய துணைத்தலைவர் வெங்கடேஷ் வரவேற்றார். இதில் மாவட்ட அலுவலக செயலாளர் குரு கிருஷ்ணன், கல்வியியல் பிரிவு மாவட்ட செயலாளர் பட்டாபிராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கஞ்சா, சாராயம் விற்பனையை அறவே ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட செயலாளர் ராஜா நன்றி கூறினார்.