அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்து பா.ஜ.க.வினர் நூதன போராட்டம்


அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்து பா.ஜ.க.வினர் நூதன போராட்டம்
x

அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுத்து பா.ஜ.க.வினர் நூதன போராட்டம் நடத்தினர்

திருச்சி

மத்திய அரசு பட்டியல் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிதியை மாநில அரசுகள் தங்களின் மாநிலத்தில் உள்ள பட்டியல் சமுதாய மக்களுக்கு செலவு செய்ய வேண்டும். ஆனால் தமிழகத்தில் மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் திட்ட நிதி மற்றும் பட்டியல் சமூகத்துக்கான துணை திட்ட நிதியினை முறையாக செலவு செய்யாமல் திருப்பி அனுப்புவதை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. பட்டியல் அணி சார்பில் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மனு அளித்து நூதன போராட்டம் நடத்தினர். இதில் பட்டியல் அணி தலைவர் யசோதன் தலைமையில் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



Next Story