மின்சார கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்


மின்சார கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
x

மின்சார கட்டண உயர்வை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

தமிழகத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் மாவட்ட பா.ஜனதா சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானாவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொருளாளர் சிவ சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க பா.ஜனதாவினர் திரண்டு சென்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இருப்பினும் பா.ஜனதாவினர் தடையை மீறி செல்ல முயன்றனர். இதனால் பா.ஜனதாவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story