செய்யாறை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் தீர்மானம்


செய்யாறை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் தீர்மானம்
x

செய்யாறை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று நகர பாரதீய ஜனதா கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை

செய்யாறை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று நகர பாரதீய ஜனதா கட்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகர செயற்குழு கூட்டம்

செய்யாறு நகர பாரதீய ஜனதா கட்சி செயற்குழு கூட்டம் நேற்று செய்யாறில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று. கூட்டத்திற்கு நகர தலைவர் கே.வி.ஆர். என்ற கே.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் குருலிங்கம் வரவேற்றார். வடக்கு மாவட்ட தலைவர் சி.ஏழுமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து டாக்டர்கள், தொழில் அதிபர்கள், வியாபாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் பெண்கள் என 50-க்கும் மேற்பட்டோர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு மாவட்ட தலைவர் சி.ஏழுமலை சால்வை அணிவித்து கவுரவித்தார்.

புதிய மாவட்டம்

தொடர்ந்து கட்சி நிதியாக செய்யாறு நகர பாரதீய ஜனதா கட்சி சார்பில் ரூ.5 லட்சத்து 1000-ஐ நகர தலைவர் கே.வி.ஆர் என்ற கே. வெங்கட்ராமன், மாவட்ட தலைவரிடம் வழங்கினார். அதனை தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மனம் தவறான முறையில் செல்லாமல் இருக்க பள்ளி, கல்லூரியில் மாணவர்களுக்கு யோக பயிற்சி அளிக்க வேண்டும். செய்யாறை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். செய்யாறு மார்க்கெட் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய நகராட்சி வணிக வளாகத்தில் அங்கு ஏற்கனவே வாடகைக்கு இருந்த நபர்களுக்கு கடைகள் நடத்த முன்னுரிமை அளிக்க வேண்டும்.

நகரின் வீதிகள் மற்றும் சாலைகளில் கால்நடைகள் திரிவதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்யாறுக்கு பஸ் வசதி குறைவாக உள்ளதால் பள்ளி மாணவர்கள் கிராமத்தில் இருந்து பஸ்சில் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் செல்வதால் கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

கேமிராக்கள் பொறுத்த வேண்டும்

வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் உபயோகிப்பதை தடை செய்ய வேண்டும். செய்யாறு அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களை போதிய அளவில் பணியில் அமர்த்த வேண்டும். செய்யாறு நகரம் முழுவதும் காவல் துறையினர் குற்றங்களை கண்காணிக்க சி.சி.டி.வி. கேமிராக்கள் பொறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் மாவட்ட ஓ.பி.சி. அணி துணை தலைவர் சி.கலாநிதி நன்றி கூறினார்.


Next Story