முகநூலில் அவதூறு பரப்பிய பா.ஜ.க. பிரமுகர் கைது
முகநூலில் அவதூறு பரப்பிய பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வல்லம்பக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனி என்கிற பழனியப்பன் (வயது 40). பா.ஜ.க. பிரமுகரான இவர், முகநூலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் தி.மு.க.வினர் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் விமலாதி ராஜன் தலைமையில், தி.மு.க.வினர் அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பழனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story