முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாஜக மாநில மகளிர் அணி செயலாளர்...!


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த பாஜக மாநில மகளிர் அணி செயலாளர்...!
x
தினத்தந்தி 24 Aug 2022 8:04 PM IST (Updated: 24 Aug 2022 8:10 PM IST)
t-max-icont-min-icon

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.சி.ஆறுகுட்டி மற்றும் பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்று வரும் திமுக பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவையில் இருந்து கார் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சி சென்றடைந்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.சி.ஆறுகுட்டி ,தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ வனப்பட்டி தினகரன், அதிமுகவின் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினராக பணியாற்றிய அபிநயா, பாஜகவின் மாநில மகளிர் அணி செயலாளர் மைதிலி உட்பட 50 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர்.


Next Story