பா.ஜ.க. ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை வேரறுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


பா.ஜ.க. ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை வேரறுக்க வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 15 March 2024 10:47 AM GMT (Updated: 15 March 2024 12:05 PM GMT)

சி.ஏ.ஏ. போன்ற சட்டங்களை அமல்படுத்துவதால் இஸ்லாமியர் மீதான வெறுப்பை சட்டப்பூர்வமாக்க வழிவகுக்கிறது

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

2014 முதல், மத்திய பா.ஜ.க. அரசாங்கத்தின் ஆட்சி இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பை கிழித்தெறிந்து, சகிப்பின்மையை வளர்த்து, இஸ்லாமிய சமூகத்திற்கு எதிரான பாகுபாட்டை அங்கீகரித்துள்ளது. சி.ஏ.ஏ. போன்ற சட்டங்களை அமல்படுத்துவதால் இஸ்லாமியர் மீதான வெறுப்பை சட்டப்பூர்வமாக்க வழிவகுக்கிறது

பா.ஜ.க. ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை வேரறுக்க வேண்டும்; பா.ஜ.க. பிடியில் இருந்து இந்தியாவின் பரந்துபட்ட பன்முக ஆன்மாவை மீட்க ஒன்றிணைய உறுதியேற்போம். என தெரிவித்துள்ளார்.


Next Story