பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்


பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
x

பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரியலூர்

அரியலூர் பா.ஜ.க. விவசாய அணியை சேர்ந்தவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொங்கல் பண்டிகைக்கு ரூ.5 ஆயிரமும், கரும்பு, தேங்காய், வெல்லம் ஆகியற்றை கொள்முதல் செய்து குடும்ப அட்டை தாரருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் நடராஜன், விவசாயி மாவட்ட தலைவர் மருது சுப்ரமணியன், நகர தலைவர் மணிவண்ணன், மாவட்ட பொது செயலாளர்கள் மகாலிங்கம், ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story