பா.ஜ.க. கூட்டணியில்தான் நாங்கள் உள்ளோம் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
பா.ஜ.க. கூட்டணியில்தான் நாங்கள் உள்ளோம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை,
சென்னையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நாங்களும், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையும் தொடர்ந்து பேசி வருகிறோம். அதேபோல, பா.ஜ.க.வில் உள்ள மேல்மட்ட தலைவர்களும் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை சந்திக்க நான் நேரம் கேட்கவில்லை. அதனாலேயே சந்திக்கவில்லை.
இது இந்தியாவை யார் ஆளப்போகிறார்கள் என்பதற்கான தேர்தல். தேசிய கட்சியாக உள்ள பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில்தான் நாங்கள் உள்ளோம். பொதுக்கூட்டத்திற்கு பா.ஜ.க. அழைக்காதது குறித்து எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. இரு தரப்பிலும் மனம் விட்டு பேசிக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story