பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் - அண்ணாமலை வழங்கினார்


பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் - அண்ணாமலை வழங்கினார்
x

சோழிங்கநல்லூர் அருகே பா.ஜ.க. சார்பில் நலத்திட்ட உதவிகளை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வழங்கினார்.

காஞ்சிபுரம்

சோழிங்கநல்லூரை அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள லட்சுமி விநாயகர் கோவில் 21-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னை மாநகராட்சி 198-வது வார்டு உறுப்பினர் காரப்பாக்கம் லியோ என். சுந்தரம் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு 5,100 தாய்மார்களுக்கு சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முன்னதாக பூரண கும்ப மரியாதையுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழாவில் பா.ஜ.க. துணைத்தலைவர் கரு.நாகராஜன் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கே.எம்.சாய்சத்யன், மொழிகளின் பிரிவு தலைவர் ஜெயக்குமார், பொருளாதார பிரிவு மாநில செயலாளர் சுதாகர், மாநில செயற்குழு அழைப்பாளர் மோகனராஜ் மற்றும் பலர் செய்திருந்தனர்.

1 More update

Next Story