குடும்ப அரசியலை ஒழித்து உண்மையான ஜனநாயகத்தை கொண்டு வர பாஜக கடுமையாக உழைக்கும் - அண்ணாமலை


குடும்ப அரசியலை ஒழித்து உண்மையான ஜனநாயகத்தை கொண்டு வர பாஜக கடுமையாக உழைக்கும் - அண்ணாமலை
x

குடும்ப அரசியலை ஒழித்து உண்மையான ஜனநாயகத்தை கொண்டு வருவதற்கு பாஜக கடுமையாக உழைக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

சுதந்திர அமுத பெருவிழாவை முன்னிட்டு சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் மாநில தலைவர் அண்ணாமலை தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது,

சுதந்திரத்துக்கு பாடுபட்டதில் தமிழ்நாட்டின் பங்கு மிக அதிகம், மருது சகோதரர்கள் முதல் பலர் சுதந்திரத்துக்காக போராடியுள்ளனர். கடந்த ஓராண்டாகவே சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களை பாஜக கொண்டாடி வருகிறது. இன்று தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடிகளை ஏற்றி உள்ளனர்.

இந்தியா ஒற்றுமையின் வடிவம் என்பதை தமிழ்நாட்டு மக்கள் காட்டியுள்ளனர். பலர் பாஜக அலுவலகங்களில் தேசியக்கொடியை பெற்று, தங்கள் இல்லங்களில் ஏற்றியுள்ளனர். தமிழகத்தில் லஞ்ச லாவண்யம் மற்றும் குடும்ப அரரசியல் தலைவிரித்தாடுகிறது. இதை ஒழித்துக்கட்டவேண்டும்.

குடும்ப அரசியலை ஒழித்து உண்மையான ஜனநாயகத்தை கொண்டு வருவதற்கு பாஜக கடுமையாக உழைக்கும். அடுத்த 25 ஆண்டுகள் முடிந்த உடன், தமிழ்நாடு இந்தியாவின் விஷ்வகுருவாக வர வேண்டும், அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story