பா.ஜனதா செயற்குழு கூட்டம்


பா.ஜனதா செயற்குழு கூட்டம்
x

சேரன்மாதேவியில் பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி பா.ஜனதா கிழக்கு ஒன்றிய சிறப்பு செயற்குழு கூட்டம், பிராஞ்சேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. ஒன்றிய தலைவர் சின்னமுருகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்கள் ராஜவேலு, பரமசிவன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் தயா சங்கர், துணைத்தலைவர் ராமராஜ் பாண்டியன் செல்வக்கனி ஆகியோர் சிறப்புரையாற்றினர். டாக்டர் ஜெயச்சந்திரன், கரிசல்பட்டி ரமேஷ், மேலசெவல் ராமசாமி, செல்லையா ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் மேலச்செவல் மாணிக்கம் நகர் வாய்க்கால் பாலம் சரி செய்து சீரமைத்திடவும், திருவிருத்தான்புள்ளி ஊராட்சியில் ஜல்ஜீவன் குடிநீர் திட்டம் கங்கணாங்குளம் பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை கண்டித்து ஒன்றிய பா.ஜ.க சார்பாக உதவி கலெக்டர் அலுவலக முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் இசக்கார் ராஜபால், மாவட்ட விவசாய அணி தலைவர் பெரிய முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story