மே 1-ந் தேதி தொழிலாளர்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்படும்


மே 1-ந் தேதி தொழிலாளர்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்படும்
x

12 மணி நேர வேலை மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மே 1-ந் தேதி தொழிலாளர்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர்களின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பு மாநில தலைவர் கூறினார்.

திருவண்ணாமலை

ஆரணி

தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜன் கூறியதாவது:-

மேதின பூங்கா அமைந்து உழைப்பாளர்களுக்கு சிலை வைத்து மதிப்பூட்டிய தமிழக அரசு இன்று தொழிலாளிகளின் நலன்களை நசுக்கி ஒடுக்கும் வகையில் 12 மணி நேர வேலை மசோதாவை கொண்டு வந்து இருப்பது விந்தையான செயலாக உள்ளது.

தொழிலாளர் நலச்சட்டத்தினை தூக்கி எறிந்து பெரும் முதலாளிகளின் நலனுக்காக இந்த மசோதா கொண்டு வந்து இருப்பது கண்டனத்திற்கு உரியது.

இதை உணர்த்தும் வகையில் வருகிற மே 1-ந் தேதி உழைப்பாளர் தினத்தன்று தொழிலாளர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வீடுகள்தோறும் கருப்பு கொடி ஏற்ற உள்ளோம்

சில தனியார் நிறுவனங்கள் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிப்பது போல் விருப்பம் உள்ளவர்கள் 12 மணிநேரம் வேலை செய்யலாம் என்று சொல்வது தொழிலாளர்களை உளவியல் ரீதியாக மனமாற்றம் செய்யும் கொடுஞ்செயலாக உள்ளது.

தமிழக அரசு இதனை மறுபரிசீலனை செய்து 12 மணிநேர வேலை மசோதாவை திரும்ப பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story