சசிகலாவுக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு


சசிகலாவுக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு
x
திருப்பூர்


அவினாசி வந்த சசிகலாவுக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு

வி.கே.சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க முடிவு செய்தார். அதன்படி ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக சுற்றுப்பயணம் செய்தார். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அவர் நேற்று திருப்பூர் வந்தார். அங்கு நிர்வாகிகளை சந்தித்த பின்னர் நேற்று மாலை 6.30 மணியளவில் அவினாசிக்கு வந்தார். அப்போது புதிய பஸ் நிலையம் அருகே அவரது ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

முன்னதாக சசிகலா வருகையை முன்னிட்டு அவினாசி புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா மற்றும் புதிய பஸ் நிலையம் பகுதி ஆகிய இடங்களில் சசிகலாவின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கொடி கட்டி இருந்தனர்.

11 பேர் கைது

அதற்கு அவினாசி அ.தி.மு.க.வினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் சசிகலா வருகையை கண்டித்தும் கருப்பு கொடி காட்டினர். கருப்பு கொடி காட்டிய அ.தி.மு.க. நிர்வாகிகள் 11 பேரை போலீசார் கைது செய்தனர். கூட்டத்தில் காரில் அமர்ந்தபடி சசிகலா ேபசினார். பின்னர் அங்கிருந்து கோவைக்கு புறப்பட்டு சென்றார்.


Next Story