கந்துவட்டி கேட்டு முதியவருக்கு மிரட்டல்
பீளமேட்டில் முதியவரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய நிதி நிறுவன உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீளமேடு
பீளமேட்டில் முதியவரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய நிதி நிறுவன உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ.61 லட்சம் வட்டி
கோவை சின்னியம்பாளையம் ஜி.கே.ஆர். நகரை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 64). இவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் சொந்த தேவைக்காக கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த சிவகுமார் சந்திரன்(48), கே.கே.புதூரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(50), திருப்பூரை சேர்ந்த ஜெயசந்திரன் ஆகியோர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் இருந்து ரூ.44 லட்சம் கடன் பெற்றேன். இதனை ரூ.13 லட்சத்து 75 ஆயிரம் வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்தினேன். ஆனால் அவர்கள், நான் வாங்கிய கடனுக்கு வட்டியுடன் ரூ.61 லட்சம் செலுத்துமாறு கேட்டனர்.
3 பேர் மீது வழக்கு
அதற்கு நான் மறுத்தேன். இதனால் அவர்கள் எனக்கு நோட்டீஸ் அனுப்பி விடுவதாக மிரட்டி வருகிறார்கள். எனவே கந்து வட்டி கேட்டு மிரட்டி வரும் அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து சிவகுமார் சந்திரன், ஹரிகிருஷ்ணன், ஜெயசந்திரன் ஆகியோர் மீது பீளமேடு போலீசார் கந்துவட்டி தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.