தேயிலை செடிகளை தாக்கும் கொப்புள நோய்


தேயிலை செடிகளை தாக்கும் கொப்புள நோய்
x
தினத்தந்தி 16 Sept 2023 5:00 AM IST (Updated: 16 Sept 2023 5:00 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் சாரல் மழையுடன், பனிமூட்டமும் நிலவுகிறது. இதனால் தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்கி வருகிறது. மேலும் தேயிலை விளைச்சல் பாதிப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் சாரல் மழையுடன், பனிமூட்டமும் நிலவுகிறது. இதனால் தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்கி வருகிறது. மேலும் தேயிலை விளைச்சல் பாதிப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

தேயிலை விவசாயம்

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை ெதன்மேற்கு, வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். அந்த நாட்களில் நீர் நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். தொடர்ந்து காபி, குறுமிளகு, இஞ்சி உள்ளிட்ட பணப் பயிர்களின் விளைச்சலுக்கு ஏற்ற காலநிலை நிலவும். நடப்பாண்டில் பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதன் காரணமாக நெல், குறுமிளகு உள்ளிட்ட விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பருவமழை பெய்யாமல் வழக்கத்துக்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் பச்சை தேயிலை விளைச்சல் பாதிக்கப்பட்டு வருகிறது. போதிய விலையும் இல்லாததால் விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் பச்சை தேயிலைக்கு உரிய விலை வழங்க கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொப்புள நோய் தாக்குதல்

இந்தநிலையில் கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் சாரல் மழை அடிக்கடி பெய்து வருகிறது. தொடர்ந்து பனிமூட்டமும் நிலவுகிறது. இதனால் தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்கி வருகிறது. இதன் காரணமாக விளைச்சல் பாதிக்கும் நிலை உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பருவமழை பெய்ய வேண்டிய சமயத்தில் சாரல் மழையும், பனிமூட்டமும் காணப்படுவதால் தேயிலை செடிகளை கொப்புள நோய் தாக்கி வருகிறது. ஏற்கனவே, பச்சை தேயிலை விலை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் அதன் விளைச்சல் பாதிக்கப்படுவதால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுத்து தேயிலை விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story