காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி பார்வையற்றோர் ஆர்ப்பாட்டம்


காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி பார்வையற்றோர் ஆர்ப்பாட்டம்
x

காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி பார்வையற்றோர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருச்சி

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே பார்வையற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு லூப்ரா பார்வையற்றோர் மற்றும் ஊனமுற்றோர் சேவை மைய இயக்குனர் தாமஸ் தலைமை தாங்கினார். இதில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் உடனடியாக திறக்க வேண்டும். ஒழுங்காற்றுக்குழுவின் பரிந்துரைப்படி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சரை அவமதித்த கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகத்தில் ஒருநாள் வேலை நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story