வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு


வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு
x

கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்றார்.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) ப.பாண்டியன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் இதற்கு முன்பு திருவண்ணாமலை மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிர் திட்ட அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தார்.

தற்போது பதவி உயர்வு பெற்று கீழ்பென்னாத்தூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story