வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு


வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு
x

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்றார்.

திருவண்ணாமலை

ஆரணி

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலராக (கிராம ஊராட்சி) ஆ.மிருணாளினி பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் இதற்கு முன்பு செங்கம் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து பதவி உயர்வு பெற்று வந்துள்ளார்.

இங்கு இருந்த எஸ்.சவிதா கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வாழ்வாதார உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்று மாறுதலாகி சென்றுள்ளார்.

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மிருணாளினிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் குப்புசங்கர், பழனி மற்றும் ஊராட்சி செயலாளர்கள் இல.பாஸ்கரன், விஜயகுமார், தேவராஜ் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story