சேலத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்திபொதுமக்கள், கலெக்டர் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு6 பேர் மீது வழக்கு
கொண்டலாம்பட்டி
சேலம் கொண்டலாம்பட்டி அருகே செம்பாய்வளவு பகுதியில் பசுமை தமிழ்நாடு இயக்க ஆண்டு விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பிறகு கலெக்டர் காரில் புறப்பட்டார். அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எங்களது பகுதியில் நீண்ட நாட்களாக சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது என்று கூறி கலெக்டர் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே கலெக்டர் காரை விட்டு இறங்கி அவர்களிடம் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்படி இருந்தும் சிலர் சமாதானம் அடையாமல் கலெக்டர் காரை தொடர்ந்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மக்களை கலைந்து போக செய்தனர். இதற்கிடையே வீரபாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.