ரத்த தான முகாம்
ஆரணி அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது.
ஆரணி
ஆரணி அரசு மருத்துவமனையும், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி ரத்த வங்கியும், ஆரணி சிறு, குறு, பெரு வியாபார சங்கமும் இணைந்து முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு ஆரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரத்ததான முகாம் நடந்தது.
அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மமதா தலைமை தாங்கினார். சிறு, குறு, பெரு வியாபார சங்க தலைவர் அருண்குமார், செயலாளார் ரவிக்குமார், பொருளாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
ரத்ததான முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்க முன் வந்தனர். அதில் தகுதி உடையவர்கள் 51 நபர்களை தேர்வு செய்து அவர்களிடமிருந்து 51 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டு அதனை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது.
முகாமில் அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.