தேனியில் அ.ம.மு.க. சார்பில் ரத்ததான முகாம்


தேனியில் அ.ம.மு.க. சார்பில் ரத்ததான முகாம்
x
தினத்தந்தி 17 Dec 2022 4:26 PM GMT (Updated: 17 Dec 2022 4:29 PM GMT)

தேனியில் அ.ம.மு.க. சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

தேனி

தேனி வடக்கு மாவட்ட அ.ம.மு.க. மாவட்ட மருத்துவ அணி சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பிறந்தநாளையொட்டி, தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் காசிமாயன் வரவேற்றார்.

முகாமை தலைமை நிலைய செயலாளர் மகேந்திரன், மாநில மருத்துவ அணி செயலாளர் அனுமந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் ரத்ததானம் செய்தனர்.

இதில் அமைப்புச் செயலாளர் ஸ்டார் ரபீக், பொறியாளர் அணி துணை செயலாளர் விமல் முருகன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story
  • chat