ரத்த தான முகாம்


ரத்த தான முகாம்
x

ஆரணியில் ரத்த தான முகாம் நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சூரியகுளம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. கெத்செமனே ஆலயம் மற்றும் கார்த்திகேயன் சாலையில் உள்ள புனித தூய காணிக்கை அன்னை ஆலயம், ஆண்கள் ஐக்கிய சங்கம், ஆரணி அரசு மருத்துவமனை, செய்யாறு அரசு தலைமை மருத்துவமனை ஆகியவை இணைந்து ரத்ததான முகாமை சி.எஸ்.ஐ. கெத்செமனே ஆலய வளாகத்தில் பங்குத்தந்தை ராய்லாசர் தலைமையில் நடந்தது.

ஆயர் எஸ்.ஆபிரகாம் ஆசைதம்பி, செயலாளர் ஜி.கிரகா செல்வமணி, பொருளாளர் பி.ஜார்ஜ், கூட்டுனர் எஸ்.பாண்டியன், செயலாளர் ஸ்டீபன், பொருளாளர் கே.ஆனந்த், அரிமா சங்க முன்னாள் தலைவர் எஸ்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செய்யாறு அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் டாக்டர் கபிலன் வரவேற்றார். முகாமில் 84 பேரிடம் இருந்து ரத்த தானம் பெறப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆரணி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) டாக்டர் கவிமணி, டாக்டர் ஷர்மிளா, தலைமை செவிலியர் டார்த்தி, செவிலியர்கள் வசந்தி, ஸ்டீபன், செல்லமாணிக்கம் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு ரத்ததானம் பெற்றனர்.


Related Tags :
Next Story
  • chat