ரத்த தான முகாம்
டாக்டர் எம்.ஜி.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தது.
ஆரணி
ஆரணியை அடுத்த இரும்பேடு ஏ.சி.எஸ். நகரில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பாலிடெக்னிக் கல்லூரியில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கியுடன் இணைந்து ரத்ததான முகாம் நடைபெற்றது.
கல்லூரி செயலாளர் ஏ.சி.ரவி தலைமை தாங்கினார். ஏ.சி.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளி செயலாளர் ஏ.சி.பாபு, கல்லூரி முதல்வர் பி.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தார். எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ஹேம்நாத் வரவேற்றார்.
வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி மருத்துவ அலுவலர் தீபக், ஆலோசகர் நந்தகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேசன், கார்த்திகேயன், விக்னேஸ்வரன், துணை செவிலியர் பரமேஸ்வரி, கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் 3 விரிவுரையாளர்கள் உள்பட 41 மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர்.