ரத்த கையெழுத்து இயக்கம்


ரத்த கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தினர்

மயிலாடுதுறை

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் சுப்பிரமணியன் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக ஓய்வு பெறும் நாளில் பணி நீக்கம் செய்ததை கண்டித்து மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ரத்த கையெழுத்து இயக்கத்தை நடத்தினார். இதற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கி, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய தலைவர் ரஜினி, பொருளாளர் சசிகுமார் உள்ளிட்ட ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டு ரத்த கையெழுத்திட்டு கோரிக்கை மனுவினை அரசுக்கு அனுப்பிவைத்தனர். சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் ரத்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுலோச்சனா, கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார பொருளாளர் பாக்யராஜ் வரவேற்றார். இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலர்கள் ரத்தத்தால் கையெழுத்து இட்டனர்.


Next Story