பூத்துக்குலுங்கும் சங்கு பூக்கள்
கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் சங்கு பூக்கள் பூத்து குலுங்குகின்றன.
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, புல்லாவெளி, கே.சி.பட்டியில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் காபி, வாழை, மிளகு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். மேலும் தோட்டங்களில் வேலிக்காக சங்கு பூ செடிகளை நட்டு வைத்துள்ளனர். அதேபோல் மஞ்சள்பரப்பு, புல்லாவெளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களையொட்டி சாலையோரங்களில் வேலிக்காக சங்கு பூ செடிகளை நடவு செய்துள்ளனர்.
இந்தநிலையில் கீழ்மலை பகுதியில் சங்கு பூ செடிகளில் தற்போது பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இதனால் சாலையோரங்களில் சங்குகளை தொங்கவிட்டதை போன்று பூக்கள் பூத்துள்ளன. அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் என பலரையும் இந்த பூக்கள் கவர்ந்து வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகள் இந்த பூக்களை தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.