மின்சாரம் தாக்கி பா.ம.க. நிா்வாகி பலி


மின்சாரம் தாக்கி பா.ம.க. நிா்வாகி பலி
x
தினத்தந்தி 18 May 2023 12:15 AM IST (Updated: 18 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் மின்சாரம் தாக்கி பா.ம.க. நிா்வாகி பரிதாபமாக இறந்தார்.

கடலூர்

கடலூர் கே.என்.பேட்டையை சேர்ந்தவர் வீரப்பன் மகன் சந்தோஷ்குமார் (வயது 37). பா.ம.க. கிளைச் செயலாளர். இந்த நிலையில் இவர் நேற்று அதே பகுதியில் இருந்த கட்சி கொடிக் கம்பத்தை புதுப்பித்து நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கொடிக்கம்பத்தை நடுவதற்காக தூக்கிய போது, மேலே சென்ற மின் கம்பியில் கொடிக்கம்பம் உரசியதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சந்தோஷ்குமார் மறைவுக்கு, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தொிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா்கள் தனித்தனியாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சிக் கொடிக் கம்பத்தை புதுப்பித்து நடும் போது சந்தோஷ்குமார் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பா.ம.க.வினா் கட்சிப் பணியாற்றும் போதும், சொந்தப் பணியாற்றும் போதும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.


Next Story