சூறாவளி காற்றில் விசைப்படகுகள் மோதி சேதம்


சூறாவளி காற்றில் விசைப்படகுகள் மோதி சேதம்
x

சூறாவளி காற்றில் விசைப்படகுகள் மோதி சேதம் அடைந்தன.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வீசிய பலத்த சூறாவளி காற்று காரணமாக துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அந்தோணி ராசு, கென்னடி, கிருபை உள்ளிட்ட மீனவர்களுக்கு சொந்தமான 10 விசைப்படகுகளுக்கான நங்கூர கயிறுகள் அறுந்து, ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்தன.

இதில் 3 விசைப்படகுகள் அதிக சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை இந்த காட்சியை கண்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி மீனவர் சங்க தலைவர் ஜேசுராஜா கூறுகையில், "ஏற்கனவே புயலால் பாதிக்கப்பட்ட மீன்பிடி படகுகளுக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. இந்தநிலையில் திடீரென இரவில் வீசிய பலத்த சூறாவளி காற்றில் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்துள்ளன. இந்த படகுகளுக்காவது அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்றார்.

இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் 3-வது நாளாக நேற்று பகலில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது.


Next Story