குற்றாலம் சாரல் விழாவில் படகு போட்டி


குற்றாலம் சாரல் விழாவில் படகு போட்டி
x

குற்றாலம் சாரல் திருவிழாவில் படகு போட்டி நடந்தது. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தென்காசி

குற்றாலம் சாரல் திருவிழாவில் படகு போட்டி நடந்தது. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

படகு போட்டி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் தினமும் பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக நேற்று குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள படகு குழாமில் படகு போட்டி நடைபெற்றது. இதில் 4 இருக்கைகள், 2 இருக்கைகள் கொண்ட படகு போட்டி நடத்தப்பட்டது.

சுற்றுலா பயணிகள் ஆர்வம்

இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த போட்டியில் கலந்து கொண்டு, இலக்கை எட்டினர்.

நான்கு இருக்கைகள் கொண்ட படகு போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை குற்றாலத்தை சேர்ந்த அருண், பழனி, செந்தில், மூர்த்தி ஆகியோரும், 2-வது இடத்தை குற்றாலத்தை சேர்ந்த இசக்கி ராஜ், முத்துராஜ், சுப்புராஜ், வசந்த் ஆகியோரும் பிடித்தனர்.

பெண்கள் பிரிவில் முதல் இடத்தை சாம்பவர் வடகரையை சேர்ந்த செய்யது அலி பாத்திமா, சரயா, மூக்கம்மாள், முருக லட்சுமி ஆகியோரும், 2-வது இடத்தை தூத்துக்குடியை சேர்ந்த சவுரியா பிச்சை பிரியா, சீனு, ஷெர்லின், வினோ ஆகியோருக்கு பிடித்தனர்.

பரிசுகள்

இரண்டு இருக்கைகள் கொண்ட படகு போட்டி ஆண்கள் பிரிவில் முதல் இடத்தை குற்றாலத்தைச் சேர்ந்த சுப்புராஜ், சந்தோஷ் ஆகியோரும், 2-வது இடத்தை முத்துராஜ், இசக்கி ராஜ் ஆகியோரும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் பரிசுகள் வழங்கப்பட்டன.

படகு போட்டி நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் சீதாராமன், படகு குழாம் அலுவலர் (பொறுப்பு) ராஜேஸ்வரி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



1 More update

Next Story