குலசேகரன்பட்டினம் தருவைக்குளத்தில் படகு சவாரி அமைக்கப்படும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்...!


குலசேகரன்பட்டினம் தருவைக்குளத்தில் படகு சவாரி அமைக்கப்படும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்...!
x

குலசேகரன்பட்டினம் தருவைக்குளம் பகுதி படகு சவாரியுடன் சுற்றுலாத்தலமாக மாற்றப்படும் என அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடி


தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் புறவழிச்சாலையில் தருவைக்குளம் உள்ளது. நீர்ப்பிடிப்புக் குளமான இப்பகுதியை தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் பல்வேறுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதிகாரிகளுடனான ஆலோசனைக்குப் பின் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது,

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில், மணப்பாடு திருச்சிலுவை ஆலயம் உள்ளிட்ட தலங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களை ஈர்க்கும் வண்ணம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள தருவைக்குளம் படகு சவாரியுடன் சுற்றுலாத் தலமாக மாற்றப்படும்.

தருவைக்குளத்தை நன்கு சீரமைத்து கரையில் நடை பாதை, உணவகங்கள், சிறுவர் பூங்கா அமைக்கப்படும். குளத்திற்கு தண்ணிர் வரும் கால்வாய் அகலப்படுத்தப்படும். தருவைக்குளம் நிறைந்தவுடன் நீர் வீணாகக் கடலுக்கு செல்வதைத் தவிர்க்கும் வண்ணம் ஆதியாக்குறிச்சி ஊராட்சியில் குளம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.


Next Story