தண்டையார்பேட்டையில் கழிவுநீர் தொட்டியில் வாலிபர் பிணமாக மீட்பு


தண்டையார்பேட்டையில் கழிவுநீர் தொட்டியில் வாலிபர் பிணமாக மீட்பு
x

தண்டையார்பேட்டையில் கழிவுநீர் தொட்டியில் வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.

சென்னை

சென்னை தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் நீரேற்று நிலையம் உள்ளது. நேற்று மதியம் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அங்கு பணிபுரியும் உழியர் வெற்றிவேல், கழிவுநீர் தொட்டியில் கழிவுநீர் செல்கிறதா? என எட்டிப்பார்த்தார்.

அப்போது 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர், பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார் மற்றும் கொருக்குப்பேட்டை எழில் நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் கழிவுநீர் தொட்டியில் மிதந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக மிதந்த வாலிபர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவர், கழிவுநீர் தொட்டி அருகே அமர்ந்து மது அருந்தியபோது போதையில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story