"மேட்டூர் அணையில் வெடிகுண்டு..." மதுபோதையில் முதியவர் செய்த பகீர் சம்பவம்


மேட்டூர் அணையில் வெடிகுண்டு... மதுபோதையில் முதியவர் செய்த பகீர் சம்பவம்
x

அணையில் மோப்பநாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய தீவிர சோதனையில் வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை.

மேட்டூர்,

சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை தொடர்பு கொண்ட மர்ம நபர், மேட்டூர் அணையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.

இதையடுத்து, நேற்று இரவு மேட்டூர் அணையில் மோப்பநாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், செல்போன் எண் சிக்னலை கொண்டு நடத்திய விசாரணையில், மேட்டூர் பேருந்து நிலையத்தில் இருந்த முதியவரிடம் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்டது.

அவரிடம் விசாரணை நடத்திய போது, மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பதும், மது போதையில், கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த‌தும் தெரிய வந்த‌து. இதையடுத்து, முதியவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.


Next Story