நாகர்கோவிலில் புத்தக கண்காட்சி


நாகர்கோவிலில் புத்தக கண்காட்சி
x

குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 4-வது புத்தக கண்காட்சி நாகர்கோவிலில் தொடங்கியது. கண்காட்சியை தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்

குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 4-வது புத்தக கண்காட்சி நாகர்கோவிலில் தொடங்கியது. கண்காட்சியை தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

புத்தக கண்காட்சி

குமரி மாவட்டம் நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 4-வது புத்தக கண்காட்சி திருவிழா நேற்று நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் தொடங்கியது. இந்த கண்காட்சி வருகிற 24-ந் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. இதில் 100 பதிப்பகங்களின் அரங்குகளும், காவல்துறை வேளாண்துறை, வனத்துறை அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 10 அரங்குகளும் என மொத்தம் 110 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

கண்காட்சியை தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று மாலையில் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா வரவேற்று பேசினார். மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் ஆணையர் ஆனந்த் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவர்களின் நண்பன்

விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசும் போது கூறியதாவது:-

உலகில் என்றும் அழியாத செல்வமாக கல்வி உள்ளது. அவற்றை அள்ளித்தரும் புத்தகங்களை நாம் தினமும் வாசிப்பதால் நமது வாழ்க்கை மேம்படும்.

புத்தகங்கள் வாசிப்பு பழக்கம் நம்மை அறிவு சார்ந்தவர்களாக சமூகத்தில் உருவாக்கும். மாணவர்களின் நெருங்கிய நண்பர்களாக புத்தகங்கள் உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டு இருந்த அனைத்து அரங்குகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டனர்.

சிறுகதைகள்

கண்காட்சியில் ஆன்மிகம், வரலாறு, மருத்துவம், பொது அறிவு, போட்டி தேர்வு, தமிழ் இலக்கியம், நவீன தொழில்நுட்பம், வேளாண்மை, பொது சுகாதாரம், குழந்தைகளுக்கான சிறுகதைகள் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றை பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு வாங்கி சென்றனர்.

நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சப்- கலெக்டர் கவுசிக், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், வன அதிகாரி இளையராஜா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி குமாரபாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள், சுய உதவிக் குழுவினர், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story