தர்மபுரியில் நடைபெற்று வரும்புத்தக திருவிழா நாளை வரை நீட்டிப்பு


தர்மபுரியில் நடைபெற்று வரும்புத்தக திருவிழா நாளை வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 16 Sep 2023 7:30 PM GMT (Updated: 16 Sep 2023 7:30 PM GMT)

தர்மபுரியில் நடைபெற்று வரும் புத்தக திருவிழா நாளை வரை நீட்டிக்கப்படுகிறது.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 5-ம் ஆண்டு புத்தக திருவிழா தர்மபுரி வள்ளலார் திடலில் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. இதில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஏராளமான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த புத்தக கண்காட்சியை தினமும் ஏராளமான பொதுமக்கள், வாசகர்கள் மற்றும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பார்வையிட்டு புத்தகங்களை தேர்வு செய்து வருகின்றனர். இந்த புத்தக திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை 10 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க புத்தக திருவிழா நாளை (திங்கட்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் புத்தக திருவிழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story