புத்தக திருவிழா மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு


புத்தக திருவிழா மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு
x

நாமக்கல் புத்தக திருவிழா மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளன என கலெக்டர் ஸ்ரேயாசிங் தகவல் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசின் சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக மாபெரும் புத்தக திருவிழா கடந்த 28-ந் தேதி தொடங்கி நல்லிபாளையம் அரசினர் வடக்கு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது.

இந்த புத்தகத் திருவிழாவில் 80 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. 20 ஆளுமைகளின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், குழந்தைகளுக்கான பொழுது போக்கு அம்சங்கள், உணவுத் திருவிழா, கலைநிகழ்ச்சிகள், போட்டிகள், அறிவியல் கோளரங்கம், வண்ண மீன்கள் காட்சியகம், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று உள்ளன.

இப்புத்தக திருவிழா இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவு பெறுவதாக இருந்தது. எனினும் புத்தக ஆர்வலர்கள், பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) என மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள், மாணவ, மாணவிகள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள் என அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி படித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story