செங்கல்பட்டு மாவட்டத்தில் புத்தக திருவிழா 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நடக்கிறது


செங்கல்பட்டு மாவட்டத்தில் புத்தக திருவிழா 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நடக்கிறது
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் புத்தக திருவிழா வருகிற 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு

சிற்பக்கலையின் மாமன்னன் மாமல்லனின் மாமல்லபுரம் சிற்பங்களும், கடல்போன்று பரந்து விரிந்த மதுராந்தகம் ஏரியும், வேடந்தாங்கல், கரிக்கிலி பறவைகள் சரணாலயங்களும், 'சங்குதீர்த்தம்' 'பட்சித்தீர்த்தம்' எனப் புகழப்படுகின்ற வேதகிரீஸ்வரர் கோவிலும் செங்கல்பட்டு நகரை ஒட்டிய கொளவாய் ஏரியும், கிழித்துக்கொண்டு பாய்கின்ற பாலாறும். மலைகளும் அமைந்திருக்கின்ற செங்கல்பட்டு மாவட்டத்தின் மேலும் ஒரு சிறப்பாக அமைய உள்ளது செங்கல்பட்டு புத்தக திருவிழா 2022.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியோடு மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிற புத்தக திருவிழாக்களின் ஒரு பகுதியாக நடைபெற உள்ளது செங்கல்பட்டு புத்தக திருவிழா.

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம். செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்த உள்ளது.

புத்தக திருவிழா இந்த மாதம் 28-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8.30 மணிவரை செங்கல்பட்டு. ஜி.எஸ்.டி சாலை. அலிசன் காசி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் புத்தக அரங்குகள். கலை அரங்கம். உணவரங்கம் மற்றும் பல்வேறு ஆளுமைகள் தினந்தோறும் கலந்துகொண்டு சிறப்பான சிந்தனை அரங்கம் போன்றவற்றுடன் நடைபெற உள்ளது.

இதனையொட்டி செங்கை புத்தக திருவிழாவில் செஸ் புகழ் தம்பியின் சின்னம் வெளியிடப்பட்டது. வாசிப்பை நேசிப்போம்" என்ற முனைப்பில் இளைய சமுதாயத்தினரிடையே கையெழுத்து இயக்கத்தையும் கலெக்டர் ராகுல் நாத் தொடங்கி வைத்தார்.

வருகிற 28-ந்தேதி காலை 9.30 மணிக்கு குறு. சிறு மற்றும நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு நிகழ்வை தொடங்கி வைக்க உள்ளார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story