பெரம்பலூரில் புத்தக திருவிழா 2 நாட்கள் நீட்டிப்பு


பெரம்பலூரில் புத்தக திருவிழா 2 நாட்கள் நீட்டிப்பு
x

பெரம்பலூரில் புத்தக திருவிழா 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

பெரம்பலூரில் நகராட்சி திடலில் புத்தக திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. புத்தக திருவிழா நேற்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் புத்தக பிரியர்களின் கோரிக்கையினை ஏற்று இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) என 2 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து கலெக்டர் கற்பகம் உத்தரவிட்டார். மேலும் புத்தக திருவிழாவில் நேற்று இரவு நடந்த சிந்தனை அரங்கிற்கு கலெக்டர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் ஆணையர் டாக்டர் தரேஸ் அகமது கலந்து கொண்டு பேசினார். மேலும் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்கிற தலைப்பில் கவிதை பித்தனும், பாரதி ஏற்றிய பைந்தமிழ் நெருப்பு என்கிற தலைப்பில் மல்லூரியும், என் குறிப்பு என்கிற தலைப்பில் தாமோதரனும் கருத்துரையாடினர்.


Next Story