அரியலூரில் நாளை புத்தக திருவிழா


அரியலூரில் நாளை புத்தக திருவிழா
x

அரியலூரில் புத்தக திருவிழா நாளை தொடங்குகிறது/

அரியலூர்

அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ் பண்பாட்டு பேரமைப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் புத்தக திருவிழா அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த புத்தக திருவிழா வருகிற 3-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது. புத்தக திருவிழா நடைபெற உள்ள அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தை கலெக்டர் ரமணசரஸ்வதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மேடைப்பணிகள், புத்தக அரங்குகள் பணி, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கலெக்டர் கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன் பணிகளை விரைவாக முடிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், அரியலூர் புத்தக திருவிழாவினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைக்கிறார். மேலும் புத்தக திருவிழாவில் தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் பங்குபெற்று கருத்துரை வழங்க உள்ளனர். புத்தக திருவிழாவை சிறப்பாக நடத்திடும் வகையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும், என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் ரமணசரஸ்வதி அறிவுறுத்தினார்.


Next Story