மண்டல அளவிலான கால்பந்து போட்டி
உடுமலையை அடுத்த சமத்துவபுரம் அருகே புதிதாக செயற்கை புல் கால்பந்து மைதானம் (டர்ப் கிரவுண்ட்) அமைக்கப்பட்டு உள்ளது.இதன் தொடக்க விழாவை முன்னிட்டு மண்டல அளவிலான கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. இதில் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இருந்து வருகை தந்த 22 அணிகள் பங்கேற்றது. இதில் வீரர்கள் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் கலந்து கொண்டு எதிர் அணியினரை வீழ்த்தி வெற்றி பெற்றனர். அதைத் தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு இறுதிப் போட்டி நடைபெற்றது.பொள்ளாச்சியை சேர்ந்த தனியார் கல்லூரி அணிகள் மோதின.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் பிகாஸ் (PCAS) அணி வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் உடுமலை நகர தி.மு.க. செயலாளர் சி.வேலுச்சாமி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினர்.