மொரப்பூர் ஊராட்சியில்ரூ.4 லட்சத்தில் ஆழ்துளை கிணறுசம்பத்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
தர்மபுரி
மொரப்பூர்
மொரப்பூர் ஊராட்சி அண்ணல் நகரில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் அமைக்க பூமிபூஜை நடந்தது. அரூர் சட்டமன்ற உறுப்பினரும், அரூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான வே.சம்பத்குமார் தலைமை தாங்கி, பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதில் மொரப்பூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் செல்வம், மகாலிங்கம், கம்பைநல்லூர் பேரூர் செயலாளர் தனபால், மாவட்ட பிரதிநிதி சென்னையன், மொரப்பூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் வினோதா ராஜா, நிர்வாகிகள் ஜெட்லி செல்வம், மோட்டுர்குமார், ராசலாம்பட்டி ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story