மதுபாட்டில்கள் விற்றவர் கைது


மதுபாட்டில்கள் விற்றவர் கைது
x

வெண்ணந்தூர் பகுதியில் மதுபாட்டில்கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

வெண்ணந்தூர்

வெண்ணந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் வெண்ணந்தூர் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி மற்றும் போலீசார் அத்தனூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற, அத்தனூர், அண்ணா நகர் பகுதியை சேர்ந்த காளியப்பன் மகன் கார்த்தி (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 24 மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story