பவுண்டரி தொழிலாளி சாவு


பவுண்டரி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 27 Oct 2022 12:15 AM IST (Updated: 27 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பவுண்டரி தொழிலாளி சாவு

கோயம்புத்தூர்

சரவணம்பட்டி

கோவை விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் நல்லய்யன். இவரது மகன் சரவணன் (வயது38).இவர் அதே பகுதியில் உள்ள பவுண்டரி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சரவணன் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு மயங்கி கிடந்துள்ளார்.

இது பற்றி அறிந்த சரவணனின் தம்பி சன்னியாசி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணனை மீட்டு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். இதுகுறித்து சன்னியாசி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story