சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் கைது


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் கைது
x

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.

கோயம்புத்தூர்

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சிறுமி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு கோவை ரத்தினபுரி பகுதியில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார்.‌

அவர், ஒரு கட்டிடத்தில் வேலை பார்த்த போது அதே பகுதியை சேர்ந்த கூலி வேலை பார்க்கும் 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.‌ அது நாளடைவில் காதலாக மாறியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து கடந்த 21-ந் தேதி அந்த சிறுவன், சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார்.

பாலியல் பலாத்காரம்

இதற்கிடையே சிறுமியை காணாததால் பெற்றோர் அக்கம் பக் கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோவை மத்திய அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் விசாரணை நடத்தினார்.

இதில், அந்த சிறுவன் மற்றும் சிறுமி ஆகியோர் கிருஷ்ணகிரியில் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுமியை மீட்டனர்.

சிறுவனை கோவை அழைத்து வந்து விசாரித்தனர். இதில், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கோவையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சிறுமியை கடத்திச் சென்று அந்த சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

போக்சோவில் கைது

இதைத்தொடர்ந்து கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

மீட்கப்பட்ட சிறுமி கோவையில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.


Next Story