செல்போன் திருடிய சிறுவன் கைது


செல்போன் திருடிய சிறுவன் கைது
x

செல்போன் திருடிய சிறுவன் கைது செய்யப்பட்டான்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், காவனூர் கிராமம் பொன்பரப்பினார் தெருவை சேர்ந்தவர் ஜோதிமுருகன் (வயது 32). இவர் திருவண்ணாமலையில் நடக்கும் ஜோதி தரிசனத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் பஸ் நிலையத்திலேயே படுத்து தூங்கியுள்ளார். அப்போது அவரது செல்போனை காணவில்லை. இதுகுறித்து அருகே இருந்த சிறுவனிடம் விசாரித்தபோது, அந்த சிறுவன் திடீரென தப்பியோடிவிட்டார். இதுகுறித்து ஜோதிமுருகன் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினார். விசாரணையில், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் செல்போனை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்து, திருச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.


Next Story