மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் கைது
திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் கைது செய்யப்பட்டான்.
திருநெல்வேலி
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள குமாரபுரத்தை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கூடங்குளத்தை சேர்ந்த 16 வயதுக்கு உட்பட்ட 5 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. அதில் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர். மற்ற 4 பேரையும் தேடி வருகின்றனர். திருட்டு போன மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story