சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
பெரம்பலூரில் ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாலியல் பலாத்காரம்
பெரம்பலூர் புறநகர் பகுதியான அரணாரை வடக்கு காலனியை சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் பாலாஜி(வயது 25). இவர் 16 வயதுடைய ஒரு சிறுமியை தன்னை காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் காதலிக்கவில்லை என்றால் இறந்து விடுவேன் என்று கூறி காதலிக்க வைத்துள்ளார். பின்னர் பாலாஜி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இரவு 11 மணியளவில் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து வந்து கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார்.
8 மாதம் கர்ப்பம்
அதனை தொடர்ந்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலாஜி அந்த சிறுமியுடன் பலமுறை உடலுறவு கொண்டுள்ளார். இதனால் அந்த சிறுமி தற்போது 8 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் நேற்று பெரம்பலூா் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, பாலாஜியை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.