டிராக்டரில் இருந்து கீழே விழுந்த சிறுவன் சாவு


டிராக்டரில் இருந்து கீழே விழுந்த சிறுவன் சாவு
x

டிராக்டரில் இருந்து கீழே விழுந்த சிறுவன் இறந்தார்.

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே கருகபூலாம்பட்டியை சேர்ந்தவர்கள் பழனியப்பன் மகன் அன்புமணி (வயது 16). முருகேசன் மகன் கருப்பையா (18), மலைச்சாமி மகன் மற்றொரு கருப்பையா. இவர்கள் 3 பேரும் சேர்ந்து டிராக்டரில் கருகபூலாம்பட்டியில் செங்கல் ஏற்றி கொண்டு மேல நிலை கிராமத்திற்கு சென்று இறக்கி விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். டிராக்டரை முருகேசன் மகன் கருப்பையா ஓட்டினார். அன்புமணி டிரைவருக்கு இடது புறமும், டிரைலரில் மலைச்சாமி மகன் கருப்பையாவும் அமர்ந்து இருந்தனர். புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில் கண்டெடுத்தாம்பட்டி விளக்கு ரோடு அருகே வந்த ேபாது, எதிர்பாராதவிதமாக டிராக்டரில் இருந்து அன்புமணி கீழே தவறி விழுந்தார். இதில் டிராக்டர் டிரைலரின் சக்கரம் அன்புமணி மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த சிறுவனை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வளையப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்புமணி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரையூர் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story