கார் மோதி சிறுவன் பலி
திருக்கடையூரில், கார் மோதி சிறுவன் பலியானான். தீபாவளியன்று பட்டாசு வெடித்ததை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது நடந்த இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
திருக்கடையூர்:
திருக்கடையூரில், கார் மோதி சிறுவன் பலியானான். தீபாவளியன்று பட்டாசு வெடித்ததை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது நடந்த இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
கார் மோதியது
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பழனி. இவருடைய 8 வயது மகன் தினேஷ். தீபாவளியன்று தனது வீட்டின் அருகில் பட்டாசு வெடித்ததை தினேஷ் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான். அப்போது ஆக்கூரில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற கார், திடீரென சிறுவன் தினேஷ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த தினேசை அவனது பெற்றோர் மற்றும் அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பரிதாப சாவு
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு சிறுவன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தேடி வருகிறார்கள்.தீபாவளியன்று கார் மோதி சிறுவன் பலியான சம்பவம் திருக்கடையூர் பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.