பிரம்மோற்சவ தேர் திருவிழா
பனப்பாக்கம் மயூரநாத கோவிலில் பிரம்மோற்சவ தேர் திருவிழா நடைபெற்றது.
ராணிப்பேட்டை
பனப்பாக்கம் பேரூராட்சியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான மயூரநாத சுவாமி கோவிலில் கடந்த 36 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 24-ந்் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டாம் நாள் பூத வாகனத்திலும், மூன்றாம் நாள் சூரிய பிரபையிலும், நான்காவது நாளள் நாக வாகனத்திலும், ஐந்தாம் நாள் நந்தி வாகனத்திலும், ஆறாம் நாள் யானை வாகனத்திலும் சாமி ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
7-வது நாளான நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். புஷ்ப அலங்காரத்துடன் தேரில் மயூரநாத சுவாமியும், சவுந்தரநாயகி அம்மையாரும் ஊர்வலமாக வந்தனர். ஒச்சேரி, நெமிலி, பள்ளுர், ரெட்டிவலம், ஜாகீர் தண்டலம், மேலபுலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சவாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story